கட்டுரைகள்
50 ஆயிரம் மக்களை அழிக்கும் திட்டம்… தீர்வை தேடுமா அரசு?
உடன்குடி அனல்மின் நிலையம் கட்ட துவங்கியதும் பிரச்சனைகள் தலைகாட்டுகிறது. அனல்மின் நிலையத்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி, ழகரம் சார்பாக ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில், தற்போதே மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க துவங்கியுள்ளனர். அனல்மின் நிலையம் கட்டப்படும் பகுதியில் ஆழமாக குழிகள் தோண்டும் போது, அந்த பகுதியில் கடல்நீர் புகுந்துவிடுகிறது. அந்நீரை கடலுக்கே திரும்ப அனுப்பாமல் வேலையை எளிதாக்க, கட்டுமான நிறுவாகம் சார்பாக தண்ணீரை விவசாய நிலத்தில் வெளியேற்றி வந்தனர். இந்நிலையில், ழகரம் சார்பாக வெளியிட்ட ஆவணப்படத்திற்கு பின், அந்த தண்ணீர் விவசாய நிலத்திற்கு வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனல்மின் நிலையத்தால் ஏற்படும் பிரச்சனைகளை, எண்ணூர் பகுதியை சுட்டிகாட்டி விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.லிங்க் கீழே