ஸ்ரீமதி பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! மாணவி பயன்படுத்திய செல்போனை உடனடியாக ஒப்படைக்க உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் 4 முறை சம்மன் அனுப்பியும் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை.
மாணவி மரணம் தொடர்பான விசாரணை 2 மாதங்களில் முடிவடையும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை நீதிமன்றம் ஒப்படைக்கவேண்டும் என்று எச்சரிக்கும் நிலையில், தன்னுடைய மகளிடம் தனியாக செல்போன் இல்லை என்று தாயார் செல்வி தெரிவித்து வருகிறார்.