அரசியல்செய்திகள்

அம்பேத்கர் சிலைக்குக் காவி சட்டை அணிவிக்கமாட்டேன் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல்.

அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்குக் காவி சட்டை அணிவிக்கமாட்டேன் என்று  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்துள்ளார்.

  • டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தச் செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினப்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி அர்ஜுன் சம்பத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அம்பேத்கர் சிலைக்குக் காவி சட்டை அணிவிக்கமாட்டேன் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல்.

 

  • இந்த மனு இன்று நீதிபதி சந்திரசேகரன் விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அம்பேத்கர் சிலைக்குக் காவி சட்டை அணிவிக்கமாட்டேன் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல்.

  • மேலும், அம்பேத்கரின் சிலைக்குக் காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன் எனவும் அந்த உத்தரவாத கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் உத்தரவாத கடிதத்தில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
  • இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்குத் தேவையான காவல்துறை பாதுகாப்பு வழங்கும்படி பட்டினப்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button