ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்த, தமிழக கட்சித் தலைவர்களின் கண்டன அறிக்கைகள்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்:
- ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 காலாவதியாகி விட்டது.
- எதிர்கால இளைஞர், மாணவர் சமுதாய நலனை கவனத்தில் கொள்ளாமல், ஆளுநரின் இத்தகைய போக்கு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது -தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:
- ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டம் காலாவதியானது துரதிர்ஷ்டவசமானது. காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல. அளுநரின் செயல்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டம் தெரிவித்துள்ளது -அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:
- ஆளுநர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு அளித்தும் அவர் ஒப்புதல் அளிக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தற்கொலை மரணத்திற்கு ஆளுநர் அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் மக்களாட்சி தத்துவத்திற்கு நேர் எதிரானதாக அமைந்திருக்கிறது. தனது பணியை சரிவர செய்யாததால் வடமாநில பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான தமிழக ஆளுநர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் -மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ்:
- ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர், இன்றைக்குள் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும், ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல.அரசியல் செய்யாமல், மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு, ஆளுநரும் தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம் -பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
- மாநிலங்களுக்கு ஆளுநரே அவசியம் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு என்ன பிரச்சினை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்? – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
User Rating:
Be the first one !
Back to top button