- உத்தரப்பிரதேசத்தின் காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே நீண்ட கால பாரம்பரிய, கலாச்சார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்திற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
- இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல் முருகன், தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலங்களவை எம்பி இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடியின் உரையை அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பூ அவர்கள் தமிழை “தமில் வாழ்க” என்று பிழையாகப் பதிவிட்டு, பகிர்ந்திருப்பதை சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
User Rating:
Be the first one !
Back to top button