செய்திகள்

“கஜா புயல்” கரையை கடந்து, நான்கு ஆண்டுகள்” கடந்துவிட்டது…!!

நிவாரணம் போதவில்லை என மீனவர்கள் இன்றளவும் தங்களுடைய வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்...

டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை ஒரே இரவில் புரட்டிப்போட்டு பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல்!!

  • 2018 நவம்பர் 11-ம் தேதி சென்னையில் இருந்து 930 கி.மீ. தொலைவில் உருவான புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து, 15ம் தேதி நள்ளிரவு நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!

  • பொழுதுவிடிந்து பார்த்தால் கொத்து கொத்தாக கால்நடைகள் உயிரிழந்து கிடக்கின்றன, கட்டிடங்கள் உருகுலைந்து காட்சியளித்தன, லட்சணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்து கிடந்தன. கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் புதிய புயல் உருவாகியுள்ளது என்றும், அதற்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். அந்தப் புயலின் வீரியத்தையும், ஆக்ரோஷத்தைம் அப்போது மக்கள் உணரவில்லை.கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!
  • நவம்பர் 11-ம் தேதி முதல் வங்கக்கடலில் மெல்ல மெல்ல நகரத்தொடங்கிய கஜா புயல், 15-ம் தேதி நள்ளிரவு, அதாவது 16-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் இருந்தது. கஜா கரையை கடந்த அந்த ஒரு மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் மொத்தமும் உருகுலைந்தன.கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!
  • நாகை, திருவாரூர், தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்களில் அடியோடு தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, வண்டுவாஞ்சேரி, சோழகன்குடிகாடு, அதிராமபட்டணம், உள்ளிட்ட பகுதிகளில் மற்ற இடங்களை காட்டிலும் புயலின் பாதிப்பு மிகக் கொடூரமாக இருந்தது. அந்தப் பகுதி மக்கள் கண்ணீரோடு ஓலமிட்டு அழுதது காண்போரை கலங்கச் செய்தது. இதையடுத்து அரசு சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரணம் முகாம்கள் அமைக்கப்பட்டன.

கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!

  • ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அந்த ஒரே இரவில் அடியோடு சாய்ந்து அதனை அரும்பாடுபட்டு வளர்த்தவர்களின் எதிர்கால கனவுகளையும் சாய்த்தது. ஒண்டுவதற்கு ஒரு குடிசை வைத்திருந்தவர்கள் நிலைமையை கேட்கவே தேவையில்லை, அவர்கள் நிற்கதியாய் தவித்த அந்த நேரத்தில் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் பலர் பொருளாகவும், பணமாகவும், உணவாகவும், உதவி செய்தனர்.

கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!

  • கஜா புயல் கரையை தொட்டு, சூறையாடி கடந்து சென்றதற்கு பிந்தைய ஒவ்வொரு நாளும் டெல்டா மக்களுக்கு ரணமாக நாட்கள்தான். கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய தொடங்கிய நிலையில் அவர்கள் பழைய வருமானத்தை ஈட்ட முடியவில்லை.புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றி புதிய தென்னங்கன்றுகளை நட்டு, புயலுக்கு முந்தைய வாழ்க்கையை நினைத்து இன்றளவும் சோக கதை பேசுகின்றனர் டெல்டா மக்கள்.

கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!

  • சாய்ந்த மரங்களை மீட்கும் முயற்சியாக விவசாயிகள் தங்கள் தோட்டங்களிலும், தன்னார்வலர்கள், சாலைப் பணியாளர்கள் சாலைகள், பொதுவெளியில் நட்ட மரங்கள் தற்போது வளரத் தொடங்கியுள்ளது. அரசு வழங்கிய நிவாரணம் போதவில்லை என மீனவர்கள் இன்றளவும் தங்களுடைய வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!

  • புயல் தந்த இழப்பை ஈடுகட்ட மா, பலா போன்ற மரக்கன்றுகள் இன்றளவும் நடப்பட்டு வருகின்றன. தங்களது உயிரை மட்டும் விட்டு விட்டு உடைமைகளை கஜா புயல் பறித்து சென்று விட்டதே என டெல்டா மக்கள் இன்றளவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!

“கஜா” புயலின் கோரத்தாண்டவம்…

 

கஜா புயல் கரையை கடந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்தது...!!

 

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button