செய்திகள்அரசியல்

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்! தொல்.திருமாவளவன்

அரசியல் என்பது பதவிக்காக, அதிகாரத்திற்காக, பொருள் ஈட்டுவதற்கானதல்ல…!!

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் கருத்து

  • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த ‘திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்’ எனும் தலைப்பில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர் ஜெ.பாரத் என்பவர் எழுதியுள்ள நூல் வெளியீட்டு விழா, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 
  • நிகழ்ச்சியில் மேடையில் பேசிய திருமாவளவன், அரசியல் என்பது பதவிக்காக, அதிகாரத்திற்காக பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்- தொல் திருமாவளவன்

  • மிக மிக குறைந்த நபர்கள் தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள். அனைத்து கட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். ஆனால் அப்படிப்பட்டவர்கள் தான் முக்கிய பொறுப்புகள் பெற்று கட்சியை வழி நடத்துவார்கள் என கூறினார். அடங்க மறுப்போம், அத்து மீறுவோம், திருப்பி அடிப்போம் என்பது கொள்கையா? கோட்பாடா? என கேள்வி எழுப்பிய திருமாவளவன், இது ஒரு செயல் திட்டம் என விளக்கம் அளித்தார்.
  • ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும் தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம், என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்கை முழக்கம் தான் அடங்க மறுத்தல், அத்து மீறுதல், திருப்பி அடித்தல் என விளக்கினார். இது வன்முறை முழக்கம் அல்ல எனவும் வன்முறைக்கு எதிரான முழக்கம் எனவும் கூறினார்.தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்- தொல் திருமாவளவன்
  • மராத்வாட பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என தொடர் போராட்டங்களில் விசிக சார்பில் ஈடுபட்டோம். அப்போது காவல் துறை எங்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. ஆணவ கொலைகளை ஆதரிக்கிறவர்கள், சாதி தூய்மை வாதிகள் எனவும் தூய்மைவாதம் என்பது பழமைவாதம், சனாதனத்தின் ஒரு கூறு அது என விமசித்தார். தமிழ் தேசிய இயக்கத்தில் விசிகவின் பங்களிப்பு மகத்தானது, பெரிய கட்சிகள் செய்ய முடியாததை சாத்தியப்படுத்தியுள்ளது என திருமாவளவன் கூறினார்.
  • தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என தெரிவித்த திருமாவளவன், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாக தான் மத்திய அரசு இருக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

0

User Rating: 4.4 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button