காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற வந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.
- காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழகம் வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்று பொன்னியின் செல்வன் நாவலை பரிசாக அளித்தார்.
- திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அத்துடன் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவும் நடைபெறுகிறது. இந்த இருவிழாக்களிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.
User Rating:
Be the first one !
Back to top button