செய்திகள்

ஒசூர் கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு ஆலை முன் முற்றுகைப் போராட்டம்! தமிழ்நாடு தமிழர்க்கே! தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமை பெ. மணியரசன் பேரழைப்பு!

வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ்நாடு தமிழர்க்கே!

அறப் போர்க்களம் அழைக்கிறது! வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ்நாடு தமிழர்க்கே!

ஒசூர், கெலமங்கலம் கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு ஆலை வாயிலில் முற்றுகைப் போராட்டம்! வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ்நாடு தமிழர்க்கே! தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமை பெ. மணியரசன் பேரழைப்பு!

இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்று ஏமாந்து கொண்டிருக்கும் தமிழர்களே!

நாற்காலி அரசியல் நாயகர்களுக்காக – கட்சி பிரிந்து கச்சை கட்டும் தமிழர்களே!

திரைப்பட மின்மினிகளுக்காகச் சங்கம் வைத்துத் தீபாராதனை செய்யும் தமிழர்களே!

இமயத்தில் கொடியேற்றி இந்தத் துணைக் கண்டத்தை ஆண்ட தமிழினம் இன்று தன் தாயகத்திலேயே அடிமைகள் ஆகிப் போனதை அறிந்தீர்களா?

எல்லாத் தகுதியும் உள்ள இம்மண்ணின் மக்கள் – தமிழ்நாட்டு வேலைகள் பெறாமல் தடுக்கப்பட்டு உள்நாட்டு அகதிகளாய் அலைவதை உணர்ந்தீர்களா?

  • கிருட்டிணகிரி மாவட்டம் – ஓசூர் அருகே, கெலமங்கலம் ஒன்றியம் கூத்தனப்பள்ளி கிராமத்தில் உள்ள வடநாட்டு டாட்டா மின்னணு தொழிற்சாலைக்கு (TATA Electronic Pvt. Ltd.) தனிச் சிறப்புத் தொடர்வண்டியில் (இரயிலில்) இந்தி மாநிலமான ஜார்கண்டிலிருந்து 860 இளம்பெண் தொழிலாளிகளைக் கொண்டு வந்து வேலையில் சேர்த்துள்ளார்கள்!

ஒசூர், கெலமங்கலம் கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு ஆலை வாயிலில் முற்றுகைப் போராட்டம்! வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ்நாடு தமிழர்க்கே! தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமை பெ. மணியரசன் பேரழைப்பு!

  • சூழ்ச்சி புரிகிறதா தமிழர்களே! முதலாளி வடநாட்டான்; தொழிலாளிகள் இந்திக்காரர்கள்! தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வடநாட்டார்க்குச் சொந்தம்; அல்லது வெளிநாட்டார்க்குச் சொந்தம்! அவர்களை அண்டிப் பிழைப்போர் தமிழர்கள்!
  • கடைத் தெருக்களில், கட்டுமானப் பணிகளில், காடு கழனிகளில், ஆலைகளில், சாலைகளில், இந்திய அரசு தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், வங்கிகளில், சிறுசிறு தனியார் தொழிற்கூடங்களில், உணவகங்களில், மொத்த வணிகத்தில், சில்லறை வணிகத்தில், மனை வணிகத் தொழிலில் என எல்லா இடங்களிலும் இந்திக்காரர்கள், மார்வாடிகள், குசராத்திகள், மலையாளிகள், ஆந்திரத் தெலுங்கர்கள், வங்காளிகள் ஆக்கிரமிப்பு! மண்ணின் மக்களோ வேலை இல்லாத் திண்டாட்டத்தில்! வறுமையின் கோரப் பிடியில்!
  • தமிழ்நாட்டின் ஆட்சி மற்றும் காவல்துறைத் தலைமை அதிகாரிகள் வடநாட்டார். தமிழர்களே, உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் தமிழ்நாடு தாயகமாக நீடிக்க வேண்டுமா? வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள்!ஒசூர், கெலமங்கலம் கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு ஆலை வாயிலில் முற்றுகைப் போராட்டம்! வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ்நாடு தமிழர்க்கே! தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமை பெ. மணியரசன் பேரழைப்பு!
  • அசாமிலே அயலார் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார்கள்! பத்தொன்பது இலட்சம் பேர் அயலார் என்று அறிவித்து, தனிமுகாம்களில் அடைத்து வைத்துள்ளார்கள்! அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இந்தியாவின் இதர மாநிலத்தவர் நுழையத் தடை! மாநில அரசின் உள் அனுமதி (Inner Line Permit) வாங்கினால்தான், அயலார் உள்ளே நுழைய முடியும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குத்தான்!
  • இந்தியாவுக்குள்ளேயே இந்த மாநிலங்களுக்கு வெளியார் செல்லும்போது, விசா வாங்கித் தான் உள்ளே நுழைய முடியும் என்று விதிமுறை வைக்கும்போது, தமிழ்நாட்டிற்கு அவற்றைக் கோரிப் பெற முடியாதா? முடியும்!
  • நம் மனம் பொங்கி எழுந்தால், அற வழியில் வீதியில் திரண்டால், வெளியார் தொழிற்சாலைகள் முன் குவிந்தால் நாம் வெல்ல முடியும்! அறம் வீழாது!
  • வரும் தி.பி. 2053 கார்த்திகை 23 – (09.12.2022) வெள்ளிக் கிழமை – ஒசூர், கெலமங்கலம் ஒன்றியம் கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு ஆலை வாயிலில் மக்கள் வெள்ள முற்றுகைப் போராட்டம்!

ஒசூர், கெலமங்கலம் கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு ஆலை வாயிலில் முற்றுகைப் போராட்டம்! வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ்நாடு தமிழர்க்கே! தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமை பெ. மணியரசன் பேரழைப்பு!

  • “இந்திக்காரர்கள் உள்ளிட்ட அயல் மாநிலத்தார் அனைவரையும் வெளியேற்று; தமிழர்களுக்கு வேலை கொடு!” என்ற முழக்கம் விண்ணைப் பிளக்கும் தமிழ்த்தேசியர்களே, விழிப்புணர்வு பெற்ற தமிழின உணர்வாளர்களே, வீடு தோறும், வீதி தோறும் சென்று மண்ணின் மக்களை அழையுங்கள்!
  • இன்னுயிர்த் தமிழ் காக்க, இந்தியை வெளியேற்றுவோம்! இனம் காக்க இந்திக்காரர்களை வெளியேற்றுவொம்! தமிழ்நாடு தமிழர்களுக்கே!
  • இவ்வாறாக, ஒசூர், கெலமங்கலம் கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு ஆலை வாயிலில் முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமை பெ. மணியரசன் பேரழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்!

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button