கட்டுரைகள்அரசியல்
கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளில் அரசியல் நிலையும்! மக்களின் வலியும்!!
மக்களின் எண்ணங்களையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும்!
அரசியல்!
- ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பது அரசியல் அதனை வைத்துதான் எந்த ஒரு இயக்கமும் நடக்கும். இதில் பழுதுபட்டாலும் அல்லது நேர்த்தியாக செயல்பட முடியாவிட்டாலும் நாட்டின் வளர்ச்சி முற்றிலும் தடைபட்டு விடும்.
- அதில் நமது நாட்டில் சமகாலத்தில் நடக்கும் அரசியல் அவலங்களும் மக்களின் எதிர்பார்ப்புகளும், நிறைவேற்றப்படாமல் இருக்கும் செயல்பாடுகளும் எதிர்த்து கேட்க முடியாத மக்களின் குரல்களும் ஒடுக்கப்படுவதை பார்த்த கவிஞர்கள்! தம் படைப்புகளை அதை நோக்கி நகர்த்த துவங்கினர். அந்த வரிசையில் மக்களின் எண்ணங்களையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும்! துணிச்சலுடனும், மிக நேர்த்தியாகவும் நாட்டின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையுடன், கவிதைகளைப் படைத்தவர்தான் கவிக்கோ அப்துல் ரகுமான். இவர் கவிதைகளில் அரசியல் நிலையையும்! அரசியல் செய்யக்கூடியவர்களின் நிலையையும்! மக்களின் வலியையும் வெளிக்கொணர்ந்த படைப்புகளை காண்போம்.
அரசியல் நிலையும்…!! மக்களின் வலியும்…!!
- அரசியலைப் பொறுத்தவரையில் “தவம் செய்கின்ற மக்களுக்கு” சாபமே கிடைக்கிறது! அப்படியானால் அரசியல் எதற்காக?? என்ற கேள்வியை முன்வைக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.