அரசியல்செய்திகள்

10% பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது! அன்புமணி இராமதாஸ்!

சமூக நீதி கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்!

10% பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது! பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்!

  • மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இது இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்!

அன்புமணி ராமதாஸ்

  • இந்தியா சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு. அவற்றைக் களைய வேண்டுமானால் சமூக நிலையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமூக நிலைக்கு பதிலாக பொருளாதார நிலையை சமூகநீதிக்கான அளவீடாகக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது!
  • மனிதர்களின் பொருளாதார நிலை என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது ஆகும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகத் தான் இருக்குமே, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான சமூகநீதியாக இருக்காது!
  • காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் நிலையில், அதை போக்குவதற்காக நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அவற்றை பாமக ஆதரிக்கும் என தனது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ்!

0

User Rating: 4.4 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button