முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் உறுதி செய்தனர்!
- பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியில் இருக்கக் கூடாது என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைத்தனர்.
- இதனிடையே முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
- நான்கு விதமான தீர்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்.5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.
- நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில், “இந்த சட்ட திருத்தம் அடிப்படை அரசியல் சாசனத்தை மீறவில்லை. வளர்ச்சி என்பது அனைவருக்கும் ஒருமித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு 50% என்பதாக இருக்க வேண்டும் என்பதை மீறவில்லை.
- இந்த இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதால், எந்த அடிப்படை கட்டமைப்புகளையும் மீறவில்லை. இட ஒதுக்கீடு என்பது சமமான சமுதாயத்தின் இலக்குகளை நோக்கி அனைவரையும் அழைத்துச் செல்வதற்கான உறுதியான நடவடிக்கையின் ஒரு கருவியாகும். இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.
Back to top button