கட்டுரைகள்இந்தியாசெய்திகள்விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2022 வரை படைத்த சாதனைகள்!
விராட் கோலியின் சாதனைகள் தொடரும் என்று....
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துமழை பொழிந்து வருகிறார்கள்!
- ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். 4 ஆட்டங்களில் கோலி 3 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம், டி-20 உலகக் கோப்பை வரலாற்றில் 3 முறை அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
2022 வரை விராட் கோலி படைத்த சாதனைகள்!
ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டி:
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேக நூறு ஓட்டங்கள் (52 பந்துகளில்).
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேக 1,000 ஓட்டங்கள்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேக 5,000 ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் மூன்றாவது வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேக 6,000 ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் இரண்டாவது வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேக 7,000 ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் இரண்டாவது வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேக 8,000 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேக 8,000 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேககமாக 10 நூறுகள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் இரண்டாவது வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேககமாக 15 நூறுகள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் இரண்டாவது வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேககமாக 25 நூறுகள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் இரண்டாவது வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேககமாக 30 நூறுகள் அடித்த முதல் வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேகமாக 35 நூறுகள் அடித்த முதல் வீரர்.
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர்.
- தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் தலைவர் எனும் சாதனை படைத்தார்.
- ஜூன் 16, 2019 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது ஒருநாள் போட்டிகளில் விரைவாக 11,000 ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனை படைத்தார். 222 போட்டியில் இவர் இந்தச்சாதனையைப் படைத்தார்.
- பின் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் போது சர்வதேசப்போட்டிகளில் விரைவாக 20,000 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். 417 ஆட்டப் பகுதிகள் விளையாடி இவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
பன்னாட்டு Twenty-20
- அதிவேகமாக 1,000 ஓட்டங்கள் எடுத்த வீரர்.
- அதிவேகமாக 2,000 ஓட்டங்கள் எடுத்த வீரர்.
- அதிவேகமாக 3000 ஓட்டங்கள் எடுத்த வீரர்.
சர்வதேச போட்டி:
- சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்கள் எடுத்த வீரர்.
- அனைத்துவடிவ போட்டிகளிலும் விரைவாக 50 நூறுகள் எடுத்தவர்(அசீம் ஆம்லாவும்) (348 இன்னிங்ஸ்).
- அனைத்துவடிவ போட்டிகளிலும் சராசரி 50 க்கும் மேல் வைத்துள்ளார்.
- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் வீரர்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர். தேர்வு (937 புள்ளிகள் 9ஆகஸ்டு 23, 2018) , ஒருநாள் (911 புள்ளிகள் (பிப்ரவரி 16,2018)) மற்றும் 20-20 (897 புள்ளிகள் (செப்டம்பர் 14, 2014)
- சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்கள் எடுத்த வீரர்.
- விராட் கோலியின் ஆட்டத்தில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் இருந்து வந்தாலும் அவரின் சாதனைகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. 2022க்கு பிறகும் விராட் கோலியின் சாதனைகள் தொடரும் என்று அவரின் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.