அரசியல்செய்திகள்

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள்...

  • தமிழ்நாட்டில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேரணி நடத்த அனுமதி கோரியிருந்த ஆர்.எஸ்.எஸ் கோரிக்கைக்கு, `சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேரணிக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு.

சென்னை உயர் நீதிமன்றம்

  • பின்னர் இது தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி நடந்த விசாரணையில், பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த 50 இடங்களில், 3 இடங்களில் மட்டுமே பேரணி நடத்தலாம் என அரசு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் தரப்பு, வி.சி.க பேரணி எண்ணிக்கையைக் காரணம் காட்டி இதை ஏற்க மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

  • இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாட்டில் மொத்தம் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
  • அதாவது, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருக்கிறது. மேலும், நீதிபதிகள் குறிப்பிட்ட ஆறு இடங்களில் இயல்புநிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

சென்னை உயர் நீதிமன்றம்

  • சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுசுவருடன் கூடிய மைதானங்களில்தான் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, ஊர்வலம் நடத்தப்பட வேண்டும்; இந்த அணிவகுப்பில் லத்தி (கம்பு) மற்றும் ஆயுதங்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அதேநேரத்தில் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராகவும் பேசக் கூடாது; மத ரீதியான உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. 
  • இத்தகைய நிபந்தனைகளை மீறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தப்பட்டால் போலீசார் சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம்

 

0

User Rating: 4.55 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button