செய்திகள்
இஸ்ரோ செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி! சென்னை கண்ணகிநகர் மாணவர்கள் 8 பேர் தேர்வு…!!
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 75 மாணவர்களில்...
- இந்திய ஒன்றியத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பல போட்டிகள் நடத்தப்பட்டது. அந்த போட்டிகளில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 75 மாணவர்களில் 8 பேர் சென்னை கண்ணகிநகரில் தமிழக தலைமைச் செயலாளர் ஐ.ஏ.எஸ்.இறையன்பு அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் செயல்பட்டு வரும் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் மக்கள் நலச் சங்கத்தில் மாலைநேர பயிற்சி வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையின் புறநகர்ப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையே பின்தங்கிய நிலையில் அமைந்திருக்கும் ஒரு பகுதியாக கண்ணகிநகரில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கான நேரடி 5 நாள் பயிற்சி வகுப்புகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மட்டும் டி.ஆர்.டி.ஓ நிலையங்களில் வழங்கப்பட உள்ளது.
- கண்ணகிநகர் பகுதியியைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேரையும், அரசு பள்ளி ஆசிரியர்களும், அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைத்தனர். இந்த மாணவர்கள் பயிற்சி முடித்து திரும்பியதும் செயற்கைக்கோள் ஏவப்படும் நாளில் இஸ்ரோவின் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி செயற்கைக்கோள் ஏவுதலத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.