அரசியல்செய்திகள்

பதவி உயர்வுக்கான தேர்வுக்குழுவில் பிரதிநிதிகள் நியமித்துடுக! மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்கிடுக! அரசு மற்றும் ஆளுநருக்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!

3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால்...

பதவி உயர்வுக்கான தேர்வுக்குழுவில் பிரதிநிதிகள் நியமித்துடுக! மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்கிடுக! தமிழக ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!

அன்புமணி ராமதாஸ்

  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர்களுக்கான மூத்த பேராசிரியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும்!அன்புமணி ராமதாஸ்
  • 10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பார்கள். பதவி உயர்வை தாமதப்படுத்தினார் அவர்களுக்கு பணிநிலை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும்!
  • மூத்த பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால், அதற்காக விண்ணப்பித்த 14 பேராசிரியர்களில் 10 பேர் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்று விட்டனர்!அன்புமணி ராமதாஸ்
  • பதவி உயர்வுக்கான தேர்வுக்குழுவில் ஆளுநநர் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும். அவர்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும்!
  • இவ்வாறாக பாமக தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அவர்கள் ட்விட்டரில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை  வைத்துள்ளார்…!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button