க.நெடுஞ்செழியனை மருத்துவமனையில் சந்தித்தார் சீமான்
- தமிழக வரலாற்று அறிஞரும், ஆசிவக கோட்பாட்டை ஆய்ந்தறிந்து வரையறுத்தவருமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து, சந்திரசேகரன் அவர்களுடன் நேரில் சென்று உடல்நலம் கேட்டறிந்தார் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
- திரு. க.நெடுஞ்செழியன் தமிழ் எழுத்தாளர் அவர்கள், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர். “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” போன்ற 18 நூல்களை எழுதியுள்ளார்.