அரசியல்இந்தியா

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 100’ஐ தாண்டியது…!!

இளைஞர்களால் தான் பாலம் சரிந்து விழுந்தது பரபரப்பு காணொளி வெளியாகி உள்ளது.

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து:  உயிரிழப்பு எண்ணிக்கை 100’ஐ தாண்டியது…!!

  • குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
  • சுமார் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாலம், பழுது நீக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.அந்த நேரத்தில் 400 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இது நடந்திருக்கிறது.

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து:  உயிரிழப்பு எண்ணிக்கை 100’ஐ தாண்டியது…!!

  • ராஜ்கோட்டின் பாஜக எம்பி மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார், மேலும் அவர் கூறுகையில், “காயமடைந்தோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருக்கலாம்” என்றார்.பாலம் இடிந்த நேரத்தில் அங்கு சுமார் 400 பேர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, “இந்த சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார்.இருள் சூழ்ந்ததால் தண்ணீரில் சிக்கியவர்களைக் காப்பாற்ற பார்வையாளர்கள் முயற்சிக்கும் போது காட்சிகளை வீடியோக்கள் காட்டுகின்றன.

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து:  உயிரிழப்பு எண்ணிக்கை 100’ஐ தாண்டியது…!!

  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்முவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியிருக்கிறார்.மீட்புப் பணிகளில் உதவ அண்டை மாவட்டங்களில் இருந்து அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் அதுல் கர்வால், மூன்று குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காந்திநகரில் இருந்து இரண்டு குழுவும், பரோடாவில் இருந்து ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இளைஞர்களால் தான் பாலம் சரிந்து விழுந்தது பரபரப்பு காணொளி வெளியாகி உள்ளது..

  • இதனிடையே இளைஞர்கள் சிலர் அந்தப் பாலத்தின் மீது குதித்தும் பாலத்தை எட்டி உதைத்து நடந்து செல்லும் காணொளி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர்களால்தான் பாலம் சரிந்து விழுந்து இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது எனினும் முழுமையான தகவல் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button