கட்டுரைகள்

கடல் தாண்டி நாட்டை கைப்பற்றிய ராஜராஜ சோழன் வரலாறு

தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் கடல் தாண்டி ஒரு நாட்டையே கைப்பற்றிய முதல் மன்னராவார். உலகில் முதல் யானைப்படை⸴ தனக்கென்று ஓர் இராணுவ படை⸴ உலக புகழ் பெற்ற  தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய மன்னர்  எனப் பல புகழுக்குச் சொந்தக்காரர் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆவார்.சோழர் மரபினரின் “பொற்காலம்ˮ எனப் போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த மன்னராவார்.விஜயாலயச் சோழனுக்குப் பிறகு வந்த சோழமன்னர்களில் மிகவும் முக்கியமானவர் ராஜராஜச் சோழன். இவர் அமைத்த சோழப் பேரரசு கிட்டத்தட்ட அடுத்த 200 ஆண்டுகளுக்கு நீடித்தது. ராஜராஜசோழனின் 30 ஆண்டுகால ஆட்சியே சோழ வரலாற்றில் மிக முக்கியமானது.

அறிவுத் தெளிவும்⸴ அரசாங்க விவேகமும்⸴ நிர்வாகத் திறமையும்⸴ போர் வீரமும் கொண்ட மாமன்னராவார். இம் மன்னனின் ஆட்சிக் காலமாகிய கிபி 985 முதல் கிபி 1014 வரை பல சாதனைகளைத் தன்னகத்தே கொண்டு சிறப்பு பெறுகின்றார்.

சிறிய தந்தை உத்தம சோழன் மறைந்த பிறகு ராஜராஜ சோழன் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.இவரது இயற்பெயர் அருண்மொழி வர்மன்.இவரது ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலிருந்து இவருக்கு ராஜராஜன் என்னும் பட்டம் பெற்றார்.ராஜராஜசோழன் அரசனாகப் பட்டம் பெற்ற காலத்தில் சோழ அரசானது வடக்கில் தொண்டை நாடு⸴ தெற்கில் பாண்டிய நாடு⸴ வட எல்லை வரையுமே பரவியிருந்தது. வடக்கு கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது. தெற்கே பாண்டிய நாடு வரை பரவி இருந்தது.கி.பி.888-ல் நடைபெற்ற காந்தளூர் போர் சேரர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே நடைபெற்றது.இப்போரில் சோழ படை வெற்றி பெற்றது.சேர படையும் அவர்களுக்கு உதவ வந்த பாண்டிய படையும் சோழ படை வீழ்த்தியது.அந்த வெற்றியின் இரு மன்னர்களின் மணி முடிகளை கைப்பற்றி மும்முடி சோழன் என்ற பட்டம் பெற்றார்.இந்த வெற்றியின் மூலம் அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற பொருள்பட ராஜராஜ சோழன் என்னும் பெயர் பெற்றார். இதன் பின்னர் அவர் வாழ்நாள் முழுவதும் ராஜராஜன் என்னும் பெயரே இயற்பெயராகி போனது.

இவர் தில்லைவால் பார்ப்பனர்களுக்கு பல நலப்பணிகள் புரிந்ததற்காக அவர்கள் இவருக்கு ராஜராஜன் என்னும் பெயர் சூட்டியதாக என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஆனால் அது குறித்த கல்வெட்டுக்கள் இல்லாததால்.அந்த வாதங்களை ஏற்க முடியவில்லை.

ராஜராஜ சோழன் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்தார்.அவருடைய ஆட்சியின் காரணமாக தான் அடுத்த இருநூறு ஆண்டுகள் ஆள முடிந்தது.இவருடைய மகன் ராஜேந்திர சோழன் கடல் கடந்து பல நாடுகளை கைப்பற்றினாலும் அதற்கான அடித்தளமிட்டது ராஜராஜ சோழன் தான்.அவருடைய இந்த வெற்றிக்கு அறிவாற்றல் மிக்க அரசியல் அதிகாரிகளும்,வீரஞ்செறிந்த படைத்தலைவர்கள் இருந்த காரணத்தால் தான் அவரால் இத்தகைய வெற்றிகளை ஈட்ட முடிந்தது.

இவரை இளைமை காலத்தில் வளர்த்தவர்கள் செம்பியன் மாதேவியும்,இவரது சகோதரியுமான குந்தவை தான் வளர்த்தனர். இவர்கள் இருவரும் சைவ சித்தாந்த நெறிமுறைகளை சொல்லி கொடுத்தனர்.இதனால் ராஜராஜ சோழன் தீவிர சைவ பக்தரானார்.அதன் காரணமாக தான்  புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் என்னும் சைவ கோயிலை கட்டினார்.இக்கோவில் தமிழர் கட்டிடக்கலையின் உயர்வுக்கும் சான்றாக உள்ளது.1005ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இக் கோவிலானது 1010ல் நிறைவுபெற்றது. உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை கொண்ட கோவில் என்ற பெருமையை தஞ்சை பெரிய கோவில் பெற்றுள்ளது.

கோவிலானது தமிழ் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சிவலிங்கம் தமிழின் மெய்யெழுத்துக்கள் 18 என்பதனால் 18 அடி உயரத்திலும்⸴ உயிரெழுத்து 12 என்பதனால் லிங்கம் 12 அடி உயரத்திலும்⸴ உயிர்மெய் எழுத்துக்கள் 216 என்பதனால் கோபுரத்தின் உயரம் 216 அடி ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகள் கடந்தும் அசையாது நிற்கும் தஞ்சை பெரிய கோவில் சர்வதேச மரபுரிமைகள் ஸ்தாபனம் உரிமைச் சொத்தாக அறிவித்துள்ளமை சிறப்புக்குரியதாகும்.

ராஐராஐ சோழன் பல பெண்களைத் திருமணம் செய்துள்ளார். ஆனால் இவருடைய பட்டத்து அரசி “உலகமகாதேவி” ஆவார். கல்வெட்டில் இவரது மனைவிமார்களாகப் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்துள்ளார். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது.

ராஜ ராஜ சோழனுக்கு பல விருது பெயர்கள் உள்ளது.கிட்டத்தட்டநாற்பது பெயர்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.அவை

  • அழகிய சோழன்
  • மும்முடிச்சோழன்
  • காந்தளூர் கொண்டான்.
  • சோழநாராயணன்.
  • அபயகுலசேகரன்
  • அரித்துர்க்கலங்கன்.
  • அருள்மொழி
  • ரணமுக பீமன்
  • ரவி வம்ச சிகாமணி
  • ராஜ பாண்டியன்.
  • ராஜ சர்வக்ஞன்.
  • ராஜராஜன்
  • ராஜ கேசரிவர்மன்
  • சோழேந்திர சிம்மன்.
  • ராஜ மார்த்தாண்டன்.
  • ராஜேந்திர சிம்மன்.
  • ராஜ விநோதன்.
  • உத்தம சோழன்.
  • உத்துக துங்கன்.
  • உய்யக் கொண்டான்.
  • உலகளந்தான்.
  • கேரளாந்தகன்.
  • சண்ட பராக்கிரமன்
  • சத்ருபுஜங்கன்.
  • சிங்கனாந்தகன்
  • சிவபாத சேகரன்.
  • சோழகுல சுந்தரன்.
  • சோழ மார்த்தாண்டன்.
  • திருமுறை கண்ட சோழன்.
  • தெலிங்க குலகாலன்.
  • நித்ய விநோதன்.
  • பண்டித சோழன்.
  • பாண்டிய குலாசனி
  • பெரிய பெருமாள்.
  • மூர்த்தி விக்கிரமா பரணன்
  • ஜன நாதன்.
  • ஜெயகொண்ட சோழன்.
  • சத்திரிய சிகாமணி.
  • கீர்த்தி பராக்கிரமன்.
  • தைல குலகாலன்.

தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை நன்கு விளக்கும் மெய்கீர்த்தியை தமிழ் மொழி அகவற்பாவில் அமைத்து தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில்  பொறிக்கும் வழக்கத்தை முதலில் கொண்டு வந்தவர் ராஜராஜ சோழன்.இத்தனை பிற நாட்டு மன்னர்களும் பாராட்டி இதே வழிமுறையை அவர்கள் பின்பற்றினர்.

மெய்கீர்த்திகள் கூறுவது எல்லாம் வெறும் கற்பனை கதை அல்ல.அவை அக்காலத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை கூறும் பாடல்.ஒன்றுக்கு மேற்பட்ட மெய்கீர்த்திகள் சில அரசர்களுக்கு கிடைத்துள்ளது.இலங்கையை ராஜராஜன் கைப்பற்றிய தகவல், ‘திருமகள் போலே’ என்று துவங்கும் கி.பி. 993ஆம் ஆண்டைச் சேர்ந்த மெய்க்கீர்த்தியால் தெரியவருகிறது. அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்தவன் ஐந்தாம் மஹிந்தன். இந்தப் போரில் தலைநகரான அனுராதபுரம் அழிக்கப்பட்டு, பொலனறுவை தலைநகராக்கப்பட்டது.

ராஜராஜ சோழன் குடமலை நாட்டின் மீது படை எடுத்தார்.அது தற்போது குடகு என்று அழைக்கபடுகிறது.கொங்காள்வார் பரம்பரையில் வந்த மன்னர் ஒருவர் ஆண்டு கொண்டிருந்தார்.சோழ படையின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் குடமலை மன்னர் ஓடினார்.அப்போரில் வீரமாக போர்புரிந்த மனிஜா என்பவரை பாராட்டி சத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்னும் பட்டம் ராஜராஜசோழன் ஆணைப்படி வழங்கப்பட்டது.மேலும் மாளவ்வி என்னும் ஊர் வழங்கப்பட்டது.

குடநாட்டிற்கு அருகில் இருந்த கங்க பாடியும்,நுள பாடியும் ராஜராஜன் படைகளால் தாக்கப்பட்டது.சுங்கபாடி மைசூர் ராஜ்ஜியத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.நுளம்பாடி பல்லவர்களில் ஒரு பிரிவினரான நுளம்பர்கள் ஆண்டனர்.இவ்விரு பகுதிகள் மீது ராஜராஜ சோழன் நடத்திய தாக்குதலில் வீழ்ந்தது.இவை மைசூர் பகுதியில் கி.பி.991-ம் ஆண்டில் வரையப்பெற்ற சோழநாராயணன் கல்வெட்டு ஒன்று உள்ளது.அக்கல்வெட்டில் இப்போர் நிகழ்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று பல போர்களை நடத்தி அவற்றில் பெரும்பாலானைவைகளை கைப்பற்றினார்.இப்போர்களில் அவருடைய புதல்வன் ராஜேந்திர சோழன் பங்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.அதன் காரணமாகவே அவர் இளவரசரானார்.அவர் இளவரசராகும் போது அவருடைய முப்பதுக்குள் இருந்தது என்று கூறப்படுகிறது.மேலே குறிப்பிட்ட பகுதிகள் எல்லாம் ராஜராஜ சோழன் கைப்பற்றிய பகுதிகளின் ஒரு துளி தான்.அதை தாண்டியும் இன்னும் பல பகுதிகளை கைப்பற்றினார்.கலிங்க நாடு வரை கைப்பற்றியதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

பல சாதனைகளைப் புரிந்த இம்மன்னன் தனது கடைசி காலத்தை கும்பகோணத்தின் அருகேயுள்ள உடையாளூர் என்ற இடத்தில் கழித்தார் என்பதை அறியமுடிகிறது. அங்கேயே கி.பி 1014ஆம் ஆண்டு இவரது உயிரும் பிரிந்தது.

இவரது சமாதி உடையாளூரில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ராஐராஐனின் சமாதியெனக் கூறப்படும் இடம் உண்மையில் சமாதி இல்லையெனவும் அவரது அஸ்தி மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button