கட்டுரைகள்

உத்தம சோழனுக்காக அரசர் பதவியை விட்டுகொடுத்த ராஜராஜ சோழன்

சுந்தர சோழன் இறந்த பிறகு ராஜராஜ சோழன்  தான் அரசர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.மக்கள் எதிர்பார்ப்பும் ராஜராஜ சோழன் தான் அரசனாக வேண்டும் என்று தான் நினைத்தனர்.அனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக உத்தம சோழன் அரசரானார்.அதுவும் ராஜராஜ சோழனின் முழு சம்மதத்துடன் நடைபெற்றது.பதவிக்காக பல மன்னர்கள் அடித்து கொண்ட நிலையில் தனக்கு வர வேண்டிய பதவியை இன்னொருவருக்கு விட்டுகொடுத்த ராஜராஜ சோழனை மக்கள் பாராட்டினர்.இது தொடர்பான செய்திகள் எல்லாம் திருவேலங்காட்டு செப்பேடுகளில் காணப்படுகிறது.உத்தம சோழன் முன்னாள் சோழ மன்னன் கண்டராதித்தன் மகன்,ராஜராஜ சோழனின் சிறிய தந்தை.இவர் முன்னமே அரசராக வேண்டியது.ஆனால் இவர் தந்தை மறைந்த சமயத்தில் இவர் சிறு குழந்தையாக இருந்த காரணத்தால் கண்டராதித்தன் சகோதரரான அரிஞ்சய சோழனுக்கு சென்றது.இவர் கி.பி.970-985 வரை ஆண்டார்.இவர் பரகேசரி என்னும் பட்டம் பெற்றார்.

உத்தம சோழன் ஆட்சி காலத்தில் திருமுல்லைவாயில்,திருவொற்றியூர் திருவடந்தை,மீஞ்சூர்,வட ஆற்காடு,திருமால்புரம்,தென் ஆற்காடு ஆகிய இடங்களில் இவர் ஆட்சி குறித்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.இதன் மூலம் தொண்டைநாடும்,திருமுனைப்பாடிநாடும் இவர் கட்டுபாட்டில் இருந்தது என்பது தெளிவாகிறது.இப்பகுதிகள் எல்லாம் சுந்தர சோழன் ஆட்சி காலத்தில் ராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ண தேவனிடமிருந்து கைப்பற்றப்பட்டது.இவருடைய ஆட்சி காலத்தில் சோழ நாடு முழுக்க அமைதியான சோழல் நிலவியது

சோழநாட்டில் இவர் ஆட்சி குறித்த கல்வெட்டுக்கள்,செப்பேடுகள் மிகுதியாக காணப்படுகின்றன.இவர் தாய் செம்பியன் மாதேவி,இவர் மனைவிகள்,அதிகாரிகள் செய்த அறச்செயல்களை கூறுவதை உள்ளன.அக்கல்வெட்டில் அப்போதிருந்த சமூக பொருளாதார நிலை,மக்களின் வாழ்நிலை குறித்து பதிவாகியுள்ளது.

இவருடைய ஆட்சியின் பதினாறாம் ஆண்டு கல்வெட்டு சென்னையில் உள்ளது.அந்த கல்வெட்டில் வடமொழி எழுத்துக்கள் அழிந்தன.தமிழ் மொழி கல்வெட்டுக்கள் மட்டுமே இதனை வைத்து மட்டும் இவருடைய வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.ஆனால் இவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறிருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உத்தம சோழனுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்பதை செம்பியன் மாதேவி என்னும் ஊரில் உள்ள கல்வெட்டில் காண முடிகிறது.அவர்களில் ஐந்து மனைவிகளின் பெயர்கள் ஒரே கல்வெட்டில் காண முடிந்தது.அவர்கள் அனைவரும் தங்கள் மாமியாரான செம்பியன் மாதேவிக்கு,செம்பியன் மாதேவி ஊரில் திருக்கையிலாயம் என்னும் சிவ ஆலயத்தை நாள்தோறும் வழிபட்டனர்.இதன் மூலம் அவர்கள் தங்கள் மாமியார் மீது வைத்துள்ள மரியாதையை காட்டுகிறது.

உத்தம சோழனின் ஆட்சி காலத்தில் நாணயங்கள் உருவாக்கப்பட்டது.நாணயத்தின் நடுவில் புலி உருவம் பொறிக்கப்பட்டதாகவும்,ஓரத்தில் உத்தம சோழன் என்று வடமொழியில் வரையப்பட்டுள்ளது.இந்த நாணயம் ஒரு வெள்ளி உலோகத்திலான நாணயம் என்று வால்ட்டர் எல்லியட் என்னும் வரலாற்று அறிஞர் தான் எழுதிய புத்தகமான தென்னிந்திய நாணயங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த நாணயம் தான் சோழ ஆட்சியில் கிடைக்கபெற்ற பழமையான நாணயம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

தான் ஆட்சி செய்த காலத்தில் மக்கள் அமைதியுடனும்,மகிழ்ச்சியுடனும் இருக்கும் படி ஆட்சி செய்த உத்தம சோழன் கி.பி.985-ம் ஆண்டு மறைந்தார்.இவருக்கு பிறந்த குழந்தைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இவருக்கு பின்னர் அருண்மொழி வர்மன் என்னும் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button