கட்டுரைகள்

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் வரலாறு

அரிஞ்சய சோழன் இறந்த பிறகு அவரது மகன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் பொறுபேற்றார்.இவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பராந்தகன்.இவருடைய பேரழகுடயவராக இருந்த காரனத்தால் இவருக்கு சுந்தர சோழன் என்ற பெயர் பெற்றார் என்று செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது.

சுந்தர சோழன் காலத்தில் பாண்டிய நாட்டில் மதுரையை ஆட்சி செய்தவர் ராசசிம்ம பாண்டியன் மகனாகிய வீர பாண்டியன்.அவரது ஆட்சியின் ஆறாம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் என்று புகழ பெற்றார்.கி.பி.953ல் நடைபெற்ற போரில் பாண்டியர்கள் சோழர்களை வீழ்த்தியிருக்க வேண்டும் என்று தெளிவாகிறது.மேலும் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் என்ற சொற்றொடரை.பாண்டியர்கள் அரச குடும்பதிலுள்ள ஒருவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது.

இதனால் சுந்தர சோழன் பாண்டியர்கள் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றார்.போரில் தோல்வியுற்ற பாண்டிய மன்னன் சுரம்புகுந்து ஒளிந்து கொண்டார்.இதனால்  பாண்டியனை சுரம் இறக்கின பெருமாள் என்ற பட்டம் சுந்தர சோழனிற்கு கிடைத்தது.இவர் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு கல்வெட்டுக்களில் சேவவூர்ப் போர் நடைபெற்ற குறிப்பு உள்ளது.இப்போர் கி.பி.962 ம் ஆண்டு நடைபெற்றது.இப்போரில் பாண்டிய மன்னனுக்கு ஆதரவாக சிங்கள மன்னர் படையும் இணைந்தது.

சிங்கள மன்னனின் செய்கையை உணர்ந்த சுந்தர சோழன் தன் படை தலைவனையும் கொடும்பாளூர் குறு நல மன்னன் பரந்தாகன் சிறிய  வேளாண் என்பவரையும் சேர்த்து பெரும் படையுடன் சிங்கள நாட்டிற்கு கி.பி 965-ல் அனுப்பினார்.இப்போரில் சோழ படை தோல்வியுற்றனர்.இப்போரின் இறுதியில் ஈழ மன்னனோடு உடன்படிக்கை மேற்கொண்டார்.ஈழ பகுதியில் உள்ள மகிந்தனது கல்வெட்டு இத்தனை உறுதிபடுத்துகிறது.

இந்த நிலையில் மதுரையை மீண்டும் கைப்பற்றினார் பாண்டிய மன்னன் வீரபாண்டியன்.இதனால் மறுபடியும் மதுரை மீது போர் தொடுப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.இப்போர் கி.பி.966-ம் ஆண்டு நடைபற்றது.இப்போர் சுந்தர சோழன் மகன் ஆதித்த கரிகாலன்,கொடும்பாளூர்வேள் பூதி விக்கிரமகேசரி,தொண்டைனாட்டுச் சிற்றரசன் பார்த்திவேந்திர் வர்மன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்போரில் சோழ படை வெற்றி பெற்றது. மேலும் ஆதித்த கரிகாலன் தீரமாக போரிட்டு பாண்டிய மன்னன் தலையை வெட்டி வீழ்த்தினார்.இதனால் அவருக்கு “வீரபாண்டியனை தலை கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்ற பட்டம் கிடைத்தது.. வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினார்.  இதனால் தொண்டைநாடு,திருமுனைப்பாடி பகுதிகள் சோழர்கள் வசம் வந்தது.

இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர் பராந்தகந்தேவியமான்,வானவன் மாதேவி என்று  இரண்டு மனைவிகள்  இருந்தனர்.வானவன் மாதேவிக்கு பிறந்த குழந்தைகள் தான் ஆதித்த கரிகாலன்,அருண்மொழி வர்மன் மற்றும் குந்தவை என்ற பெண் மகள் பிறந்தனர்.மூத்த மகன் ஆதித்த கரிகாலன் வீர தீர செயலை பார்த்து சுந்தர சோழன்,ஆதித்த கரிகாலனை பட்டத்து இளவரசனாக ஆக்கினார்.மற்றொரு மகன் அருண்மொழி வர்மன் சோழர்களின் புகழை நாலா புறமும் பரப்பிய ராஜராஜ சோழன்.குந்தவை பிராட்டியாரை வந்தியதேவனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

சுந்தர சோழனின் ஆட்சியின் இறுதியில் நடைபெற்ற முக்கிய  சம்பவம் அவரை மரணத்தை விரைவாக தள்ளியது.கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழரின் மூத்த மகனும் வீரனுமான,  ஆதித்த கரிகாலன்  நான்கு பேரால் கொல்லப்பட்டார். சோமன்,ரவிதாசன் பம்ஜவன் பிரமாதிராஜன்,பரமேசுவரன் என்கிற இருமுடி பிரமாதிராஜன்,ரேவதாசக் கிரமவித்தன் இந்த நால்வர் தான் கொலை செய்தார்கள் என்று உடையார்குடி கல்வெட்டு கூறிகிறது.இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்ற செய்த்யும் உள்ளது. ஆதித்த கரிகாலன் மரணம் குறித்த சர்ச்சை குறித்து  தமிழில் புகழ்  பெற்ற புதினமான பொன்னியின் செல்வன்  பேசுகிறது .இப்போது அந்த புதினம் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வெளியாகியுள்ளது.இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானார்.

சுந்தரசோழருக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழர் இறந்தார். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டார். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வம்சத்து ‘வானவன் மாதேவி’ என்ற இவர் மனைவி, கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறினார். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவர் மகள் ‘குந்தவையால்’ தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button