கட்டுரைகள்

கண்டராதித்த சோழன் வரலாறு

முதல்பராந்தகசோழன் இறந்த பிறகு அவரது இரண்டாவது மகன் கண்டராதித்தன் அரசராக பொறுபேற்றார்.இவர் ராசகேசரி என்னும் பட்டம் பெற்றார்.இவரது ஆட்சியில் சோழ பேரரசு சிறய வீழ்ச்சியை சந்தித்தது.அவருடைய தந்தையின் ஆட்சியில் ஆரம்பித்த இந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்தது.இவர் தந்தையின் கீழிருந்த பாண்டிய நாட்டு அரசன் வீரபாண்டியன் தன்னை யாருக்கும் கட்டுபடாத அரசராக உருவெடுத்தார்.இவர் தந்தையின் ஆட்சி காலத்தில் ராஷ்டிர கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ண தேவன் தொண்டைநாட்டையும்,திருமுனைப்பாடி நாட்டையும் வெற்றி கொண்டதால் சோழ நாடு மட்டுமே கண்டராதித்த சோழன் கட்டுப்பாட்டில் இருந்தது.தன் கைவிட்டு போன பாண்டிய நாட்டை திரும்பவும் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.ஆனால் இறுதிவரை  நிறைவேறவில்லை.

இவர் மிக தீவிரமான சிவ பக்தராக இருந்தார். மேலும் இவர் தமிழ் புலமையும் கொண்டிருந்தார்.தில்லை திருச்சிற்றம்பலம் அடியார் மீது தீவிரமான பக்தி கொண்டவர்.அவர் மீது கொண்ட பக்தியால் இவர் பாடிய திருப்பதிகம் ஒன்று சைவ திருமுறைகளிள் ஒன்பதாம் திருமுறையாக இருக்கிறது.இவர் பாடிய திருப்பதிகத்தில் இவர் தன்னை ‘கோழிவேந்தன்’ என்றும் ‘தஞ்சையர்கோன்’ என்றும் கூறியுள்ளார்.

இவர் தீவிரமான சிவபக்தர் என்றாலும்,பிற சமயத்தை இவர் வெறுத்தது கிடையாது.இவர் அமைத்த கண்டரதித்தச் சதுர்வேதி மங்கலத்தில்,கண்டராதித்த விண்ணகரம் என்ற வைணவ சமயத்தினர் வணங்கும் திருமால் கோட்டம் ஒன்றை அமைத்தார். இவர் பிற சமயத்தின் மீது வைத்துள்ள மரியாதை குறித்து திருநாவுக்கரசு சுவாமிகள் இவரை புகழ்ந்து பாடியுள்ளார்.இன்றைய காலகட்டத்தில் இது போன்ற மத நல்லிணக்க எண்ணங்கள் மிக அவசியமாகி உள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.முதலாமவர் வீரநாராயணி,இரண்டாமவர் செம்பியன் மாதேவியார்.கண்டராதித்தன் அரசராக பதவியேற்ற போது முதல் மனைவி வீரநாராயணி மறைந்ததால்,இரண்டாவது மனைவியான செம்பியன் மாதேவி அரசியானார். ஐவரும் கணவரை போன்று தீவிர சிவபக்தி உடையவர்.தன கணவர் இறந்த பிறகும் கி.பி.1001 வரை உயிருடனிருந்தார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கண்டராதிதனுக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாமல் இருந்தனர்.நீண்ட நகாலத்திற்கு பிறகு செம்பியன் மாதேவி மூலமாக இவருக்கு மதுராந்தகன் என்ற உத்தம சோழன் மகனாக பிறந்தார்.இவர் ஆறு மன்னர்கள் சோழ பேரரசை ஆண்டதை கண்டிருக்கிறார்.1.முதலாம் பராந்தக சோழன் (மாமனார்), 2.கண்டராதித்த சோழன் (கணவர்), 3.அரிஞ்சய சோழன் (கொழுந்தன்) ,4.இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழன் (அரிஞ்சய சோழனின் மகன்),5.மதுராந்தகன் என்ற உத்தம சோழன் (மகன்),6.முதலாம் ராஜராஜ சோழன் (கொழுந்தனின் பேரன்) உள்ளிட்டோரின் ஆட்சியை கண்டுள்ளார்.

இவர் மிக குறுகிய காலமே சோழ பேரரசை ஆண்டார்(ஏழு ஆண்டுகள்).இவர் மகன் சிறு குழந்தையாக இருந்த காரணத்தால்,தனக்கு பிறகு  சகோதரன் அரிஞ்சய சோழனை அரசராக அறிவித்தார்.இவருடைய மரணம் குறித்து தெளிவான பதிவுகள் எதுவம் இல்லை.சிலர் இவர் போர் களத்தில் மரணித்தார் என்று கூறுகின்றனர்,இன்னும் சிலர் இவர் நோயினால் மரணமடைந்தார் என்று கூறுகின்றனர்.  இவர் இறந்த பிறகு இவருடைய மனைவி செம்பியன் மாதேவி “கண்டராதித்தம்” என்னும் கற்றளி அமைத்து,படிமத்தில் தன் கணவன் இறைவனை வழிபடுவது போன்று அமைத்துள்ளார்.கண்டராதித்தனுக்கு  மும்முடி சோழன் என்ற பெயரும் உண்டு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button