என்எல்சி நிறுவனம் தொடர்ச்சியாக தமிழகத்தை சேர்ந்தவர்களைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அமமுக இறங்கி போராடும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தின் வளத்தை எடுத்து தொழில் நடத்தும் பொதுத்துறை நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தவர்களைப் புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. உடனடியாக புதிய பொறியாளர் தேர்வு பட்டியலை ரத்து செய்துவிட்டு என்எல்சி-க்கு இடம் கொடுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்க வேண்டும்.
என்எல்சி நிறுவனம் தொடர்ச்சியாக தமிழகத்தை சேர்ந்தவர்களைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கி போராடும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.