பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.
2016-ம் ஆண்டு மம்தா அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தியது. நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளதால் அமலாக்கத் துறையும் இவ்வழக்குத் தொடர்பாக விசாரணையில் இறங்கியது.
இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக நேற்றைய தினம் 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.