சினிமா

68-வது தேசிய விருதுகள்: சிறந்த நடிகர் சூர்யா; ஆதிக்கம் செலுத்திய ‘சூரரைப்போற்று’

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த படம் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.

சிறந்த நடிகர்: இந்த விருது இரண்டு நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூரரைப்போற்று படத்துக்காக சூர்யாவுக்கும், ‘தி அன்சங் வாரியர்’ படத்துக்காக அஜய் தேவ்கன்னுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை: ’சூரரைப்போற்று’ படத்துக்காக அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த உறுதுணை நடிகர் (பெண்): சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ்ப் படம்: சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வசந்த் இயக்கியிருந்தார். சிறந்த மலையாளப் படமாக ‘திங்கலஞ்ச நிச்சயம்’ (Thinkalazhcha Nishchayam) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): தமிழில் ‘சூரரைப்போற்று’ படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஸ்ட் எடிட்டிங்: ‘சிவரஞ்சினியும் சில பெண்களும்’ படத்துக்காக எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்துக்கு தேசிய விருது அறிவிப்பு.

சிறந்த திரைக்கதை: ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்காரா இருவருக்கும் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பியூச்சர் ஃபிலிம் : ‘சூரரைப்போற்று’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் best screenplay (diologue writer): ‘மண்டேலா’ படத்தின் சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் விருது மடோனே அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: மண்டேலா படத்துக்காக அதன் இயக்குநர் மடோனாஸ் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஸ்ட் ஸ்டண்ட் விருது: ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்காக ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் விருது: தெலுங்கில் வெளியான ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ படத்தின் இசையமைப்புக்காக இசையமைப்பாளர் தமன் சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பெண் பின்னணி பாடகர்: ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்காக நஞ்சம்மாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆண் பின்னணி பாடகர் விருது ராகுல் தேஷ் பாண்டே ‘மீ வசந்தராவ்’ மராத்தி படத்துக்கு அறிவிக்கப்பட்டது.

சிறந்த உறுதுணை நடிகர்: அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக பிஜூ மேனனுக்கு அறிவிக்கப்பட்டது.

சிறந்த இயக்குநர்: அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு (மறைவு) சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறவிக்கப்பட்டுள்ளது.

பெஸ்ட் புக் ஆன் சினிமா : கிஸ்வர் தேசாய் எழுதிய ‘தி லாங்கஸ்ட் கிஸ்’ புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.

திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக (Most Film Friendly State) மத்தியப்பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகளுக்காக மொத்தம் 305 படங்கள் 30 மொழிகளில் அனுப்பப்பட்டன. அதில் மேற்கண்டவை சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button