செய்திகள்தமிழ்நாடு

சென்னையில் இதுவைர 203 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது: காவல்துறை

சென்னை பெருநகரில் நடப்பாண்டில் இதுவரை 203 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 குற்றவாளிகள் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி, கஞ்சா விற்பனை, பெண்களை வைத்து பாலியல் தொழில், பெண்களை மானபங்கம் செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 203 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 9ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 14 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள் திருந்தி வாழ்வதற்காக, சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுக்கப்படுகிறது.

மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை, செயல்துறை நடுவர்களாகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்கள், 1 வருடத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாது சிறை தண்டனை விதித்து, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்பேரில், கடந்த ஒரு வாரத்தில், பிணை பத்திரம் மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள் பிணையில் வரமுடியாத தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button