கட்டுரைகள்

ராஜபக்சே ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும்;அரசியல் வீழ்ச்சியும்

கடந்த மூன்று மாதங்களாக இலங்கை மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.இதன் தொடர்ச்சியாக மிக பெரிய மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளது.போராட்டத்தில்அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் மட்டுமில்லாமல் ராஜபக்சே குடும்பம் முழுவதுமாக பதவி விலக  வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக ஆளும் அரசாங்கத்திற்கு மிக கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மக்களின் தீவிரமான போராட்டத்தை அடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சே மூன்று நாட்களுக்கு முன்னர் பதவி விலகினார்.நேற்று  ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார்.கடந்த ஒன்றரை தசாப்தமாக இலங்கை முழுவதும் கோலோச்சிய ராஜபக்சே குடும்பம் வீழ்ந்தது எப்படி?இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு காரணம் என்ன?என்பதை குறித்து பார்க்கலாம்?

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணமாக இருப்பது அவர்களிடம் உற்பத்தி துறையில் இருக்கும் பற்றாக்குறை.பெரும்பாலும் அவர்கள் இறக்குமதி பொருட்களை சார்ந்து தான் அவர்களுடைய அன்றாட வாழ்கை அமைந்திருக்கிறது.மேலும் அவர்கள் சேவை துறையை நம்பி தான் இருந்தார்கள்.எந்த ஒரு நாட்டிலும் உற்பத்தி துறை மிக குறைவாக இருந்தால் அந்த நாடு பொருளாதார நெருக்கடியை தவிர்க்கவியலாது.அதிலும் உள்நாட்டு போரில் ஈடுபட்ட நாடு என்றால் அங்கு பொருளாதார சிக்கல் இன்னும் அதிகமாகும். இந்த  பின்னணியில் தான் இலங்கை பொருளாதார நெருக்கடியை  அணுக முடியும்.

இலங்கையின் பொருளாதாரத்தில் 10 சதவீதம் ஜிடிபி சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கிறது, அதன்பின் தேயிலை, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆயத்த ஆடைகள், தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைச் சார்ந்துதான் இலங்கைப் பொருளாதாரமே இயங்கிக் கொண்டிருக்கிறது. மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு 52 சதவீதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவீதமாகவும் இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லா நாடுகளும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன.ஆனால் இலங்கையில் ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.ஊரடங்கு முடக்கத்தால் பொருளாதார சுற்றுலாவில் இருந்து வருகின்ற வருமானம் தடைபட்டது.இதே நிலை தேயிலை உற்பத்தி துறைக்கும்,ஜவுளி துறைக்கும் ஏற்பட்டது. ராஜபக்சே குடும்பத்தின் கட்டுகடங்காத ஊழலும் இந்த பொருளாதார நெருக்கடியும் இதற்கு காரணம்.

2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

2021, நவம்பர் நிலவரப்படி இலங்கை அரசிடம் 160 கோடி அமெரிக்க டாலர்தான் அந்நியச் செலாவணி கையிருப்பாக அடுத்த 12 மாதங்களுக்கு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடனாக இலங்கை அரசும், தனியார் துறையும் 730 கோடி டாலர் செலுத்த வேண்டும், இதில் 500 கோடி டாலர் சர்வதேசக் கடன் பத்திரங்களாக இருக்கின்றன. இந்தக் கடனை 2022, ஜனவரிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.இது போக போர் காலகட்டத்தில் வாங்கிய கடனும்,திடீரென்று இயற்கை விவசாயம் என்று அறிவித்து ரசாயன் உரங்கள் மீதான தடையும்  அவர்களின் நிதி சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

2021, நவம்பர் நிலவரப்படி இலங்கை அரசிடம் 160 கோடி அமெரிக்க டாலர்தான் அந்நியச் செலாவணி கையிருப்பாக அடுத்த 12 மாதங்களுக்கு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடனாக இலங்கை அரசும், தனியார் துறையும் 730 கோடி டாலர் செலுத்த வேண்டும், இதில் 500 கோடி டாலர் சர்வதேசக் கடன் பத்திரங்களாக இருக்கின்றன. இந்தக் கடனை 2022, ஜனவரிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.இதன் காரணமாக சீனாவின் வலைக்குள் இலங்கை சிக்கியுள்ளது.

ராஜபக்சேக்களின் வீழ்ச்சி:

கடந்த ஒன்றரை தசாப்தங்களாக ராஜபக்சே குடும்பத்தின்  செல்வாக்கு இலங்கை முழுவதும் பரவியிருந்தது.அவர்களை இலங்கை மக்கள் தங்கள் கதாநாயகர்களாக பார்த்தனர்.குறிப்பாக போரின் முடிவிற்கு பிறகு அவர்களின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.அதன் பிறகும் அவர்கள் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை நிறுத்தவில்லை.சிங்களர்களையும்  தமிழர்களையும் அவர்கள் மேலும் பிளவுபடுதினார்கள்.இன ரீதியாக பிளவுபடுத்தியது போதாதென்று மத ரீதியாக இசுலாமியர்களையும் பௌத்தர்களையும் பிளவுப்படுத்த ஆரம்பித்தார்கள்.உதாரணமாக கோத்தபய ராஜபக்சே தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு பின்னர் தான் சிங்கள மக்கள் அளித்த வாக்கினால் தான் வெற்றி பெற்றேன் என்று கூறினார். வெளிப்பதியாக தங்கள் சொந்த நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் அரசியலை செய்தார். அமைச்சரவையில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கினார்.இது அப்பட்டமான குடும்ப அரசியலின் வெளிப்பாடு தான் .

சர்வாதிகாரிகள் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.இந்த உலகத்தையே தங்கள் பாசிச,நாஜிச கொள்கையால் கபளீகரம் செய்ய துடித்த முசோலினி,ஹிட்லர் ஆகியோருக்கு நேர்ந்த கதி எல்லோருக்கும் தெரியும்.சொந்த மக்களாளையே அவர்கள் இழிவுபடுத்தும் நிலைதான் அவர்களுக்கு ஏற்பட்டது.உலகம் முழுக்கவே பாசிஸ்டுகள் இப்படிதான் வீழ்ந்து இருக்கிறார்கள். மெஜாரிட்டி – மைனாரிட்டி அரசியலை செய்து “சில காலம்” ஆட்சி செய்த தலைகள் எல்லாம் இப்படித்தான் தங்கள் சிம்மாசனத்தை இழந்துள்ளனர். வரலாற்றில் பல தலைகள் இப்படி கொட்டிக்கிடக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் மஹிந்த ராஜபக்சே. இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை வீழ்த்திய பின் அந்த நாட்டின் ஹீரோவாக மஹிந்த ராஜபக்சே போற்றப்பட்டார். தமிழர்கள் மீதான இவரின் வன்மம் இன்னும் தீராத நிலையில்.. சிங்களர்கள் இவரை தங்கள் ஹீரோ போல கொண்டாடினார்கள்.

ஆனால் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இன, மதம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி வரும் அரசுகள் நீண்ட காலம் இருந்ததாக சரித்திரம் இல்லை. ஏனென்றால் இது போன்ற பிரச்சனைகளை மையப்படுத்தும் போது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மீது அரசு கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். இன, மதம் மீது கவனம் செலுத்திய இலங்கை அரசு சரியாக பொருளாதார திட்டங்களை வகுக்க முடியாமல் வீழ்ச்சி அடைந்தது. பேரினவாதத்தின் மீது கவனம் செலுத்திய இலங்கை மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தவில்லை.

பொருளாதார கொள்கைகளை வகுப்பது பற்றிய போதிய விழிப்புணர்வு ராஜபக்சே குடும்பத்திற்கு இல்லை. என்ன செய்தாலும் நாம்தான் ஆட்சியில் இருப்போம்.. நம்ம இனம் நமக்குதான் ஆதரவாக இருக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் உலகில் எல்லா பாசிஸ்டுகளையும் அவர்களை கதாநாயகர்களாக  கொண்டாடிய அதே மக்கள்தான் தூக்கி வீசினார்கள். அதே வரலாறுதான் இலங்கையில் இன்று நடக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button