செய்திகள்இலங்கை

இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு – மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் தடை

இலங்கையில் நிலவிவரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இதைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. இதனிடையே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இலங்கை முழுவதும் கலவரம் வெடித்தது. மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் கலவரம் நீடித்தது.

மகிந்த ராஜபக்சவின் வீடு உட்பட ஆளும் கட்சி தலைவர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுத் தள்ள முப்படைகளுக்கும் போலீஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் நேற்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கின. பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button