குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தஹாத் மாவட்டத்தில் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். அங்கு நேற்று நடந்த ஆதிவாசி சத்தியாகிரக பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். அதற்கு முன் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத்தில் அவர் தொடங்கிய பணியும், நாட்டில் தற்போது அவர் செய்யும் பணியும் குஜராத் மாடல் என அழைக்கப்படுகிறது.
இன்று இரண்டு இந்தியா உருவாக்கப்படுகிறது. ஒன்று பணக்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கானது. மற்றொன்று சாதாரண மக்களுக்கானது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்காது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.