செய்திகள்இந்தியா

ஹிஜாப், ஹலால் எதிர்ப்பை தொடர்ந்து கர்நாடகாவில் ம‌சூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹலால்செய்யப்பட்ட இறைச்சி விற்பனைசெய்யவும் இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மசூதிகளில்ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கு பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ன வேதிகே, ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவ‌ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த பஜ்ரங் தள நிர்வாகி பரத்ஷெட்டி கூறும்போது, ”மசூதிகளில் ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி வழிபாடு நடத்துவதைப் போல ஆஞ்சநேயர் கோயிலில் ஜெய் ராம் கோஷம் எழுப்பி வழிபாட்டை தொடங்க இருக்கிறோம்.காலையில் பஜனை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்” என்றார்.

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா கூறும்போது, “முஸ்லிம்கள் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. அதேபோல மற்ற மதத்தினரும் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இந்து அமைப்பினர் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை”என்றார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, “ஒலிப்பெருக்கி பயன்பாடு குறித்த நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும். மக்களிடையே அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button