ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அமைதிப் பேச்சுவார்த்தையில் யுக்ரேனுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் இன்று போலந்திற்குச் செல்லவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
“விளாதிமிர் புதின் இன்னும் ராஜீய உறவு முக்கியமானது போல் நடந்து கொள்ளவில்லை ” என்று அவர் கூறியுள்ளார்.
“பேச்சுவார்த்தைகளில் யுக்ரேனின் பக்கத்தை வலுப்படுத்த பிரிட்டன் மற்றும் எங்கள் நட்பு நாடுகளின் கடினமான அணுகுமுறை மிகவும் முக்கியமானது.”
வெளியுறவு செயலர் வார்சாவில் தனது உக்ரேனிய மற்றும் போலந்து சகாக்களான டிமிட்ரோ குலேபா மற்றும் ஸ்பிக்னிவ் ராவை சந்திக்க உள்ளார்.
ட்ரஸ், ரஷ்யாவிற்கு எதிராக நட்பு நாடுகளிடமிருந்து கூடுதல் நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க உள்ளது, மேலும் யுக்ரேனில் பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்காக பணிபுரியும் நிறுவனங்களுக்கு 1 கோடி பவுண்டு வரை நிதி ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
“ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்வோம், மேலும் பலவற்றைச் செய்ய மற்றவர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம் ” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வார இறுதியில் G7 மற்றும் நேட்டோ பேச்சுக்களுக்காக பிரஸ்ஸல்ஸுக்குச் செல்வதற்கு முன், வெளியுறவுச் செயலர் யுக்ரேனிய அகதிகளுக்கு ஆதரவளிக்கும் உதவி அமைப்புகளையும் பார்வையிட உள்ளார்.