செய்திகள்இந்தியா

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் உடல் தாயகம் கொண்டுவரப்பட்டது: முதல்வர் பசவராஜ் அஞ்சலி

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் தாயகம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் மற்றும் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (வயது 21). இவர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கார்கிவ் நகரில் சிக்கியிருந்த நவீன் சேகரப்பா ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது ரஷ்ய குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது உடலைப் பெற்றுத்தருமாறு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல் இன்று (மார்ச் 21) உக்ரைனிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இறந்த மாணவர் நவீன் குடும்பத்தினருடன் முதல்வர் பசவராஜ் மற்றும் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து நவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button