செவ்வாயன்று,யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போலாந்திலிருந்து யுக்ரேன் தலைநகர் கீயஃபிற்கு போலாந்து,ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் பிரதமர்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர்.
கீயஃபில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்டு தலைவர்களும் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர்.
இந்த பயணம் ஆபத்தானதாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்த பிறகும் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சென் குடியரசின் பிரதமர், ‘யுக்ரேன் மக்கள் தங்களின் விடுதலைக்காக போராடுகின்றனர்’ எனதெரிவித்தார்.
அதேபோல பிரதமர்களின் வருகை யுக்ரேனுக்கு வழங்கப்படும் வலுவான ஒரு ஆதரவு என்று ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோதே தலைநகர் கீயஃபில் வெடிச்சத்தங்களை கேட்க முடிந்தது.