நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், சிபிசிஎல் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சிபிசிஎல் அலுவலகம் இன்று காலை பூட்டிக் கிடந்ததால், மின்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், நாகூர் மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.
இது குறித்து பலமுறை நாகை மாவட்ட மின்சார துறை அதிகாரிகள் அறிவிப்புகள் கொடுத்தும், அந்நிறுவனம் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.