அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து முகநூலில் அவதூறு கருத்து தெரிவித்தும் கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டு வந்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா நேற்று கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பற்றி கடலூர் எஸ்.என்.சாவடி டி.எஸ்.ஆர். நகரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (வயது 51) என்பவர் முக நூலில் அவதூறாக பதிவிட்டு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் முகநூலில் மாவட்டக் கழகத்தை வீணாக்கிய சாதி வெறி பிடித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலை துண்டிக்கப்படும் எனவும் எம்ஆர்கே அழிவின் ஆட்டம் ஆரம்பம் எனவும் முரளி கிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து திமுக பிரமுகரான முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். முரளிகிருஷ்ணன் கடலூரில் உள்ள பெயிண்ட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என கூறப்படுகிறது.