இரான் மற்றும் சிரியாவை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக தடைகள் பெற்ற நாடாக ரஷ்யா மாறியுள்ளது என்று பொருளாதார தடைகள் கண்காணிப்பு இணையதளமான காஸ்டெல்லம்.ஏஐ(Castellum.ai) தெரிவித்துள்ளது.
காஸ்டெல்லம்.ஏஐ இணையதளதின் தகவல் படி பிப்ரவரி 22 க்கு முன்னர் ரஷ்யாவிற்கு எதிராக 2,754 தடைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தன.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு அடுத்த நாள் சுமார் 2,778 தடைகள் விதிக்கப்பட்டன, எனவே மொத்தமாக ரஷ்யா 5,532 பெற்ற நிலையில், இதற்கு முன்னதாக 3,616 பொருளாதாரத் தடைகளை பெற்று முன்னணியில் இருந்த ஈரானை பின்னுக்குத் தள்ளியது.
ரஷ்யா மீது தற்போது போடப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளில், அமெரிக்கா 21 சதவீத தடைகளை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 18 சதவீத தடைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
யுக்ரேன் மீதான தாக்குதலை நிறுத்த, ரஷ்யா மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்தும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.