திமுகவைச் சேர்ந்த வேட்பாளர், போட்டி வேட்பாளர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் விஜயகுமார் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். அப்போது, திமுக அன்னூர் நகரச் செயலாளராக உள்ள 6-வது வார்டு கவுன்சிலர் பரமேஸ்வரன் தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டது.
சிறிது நேரத்தில், அன்னூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் தேர்தல் முடிவை அறிவிக்க இருந்தார். அப்போது வேட்பாளர்கள் விஜயகுமார் – பரமேஸ்வரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து செயல் அலுவலரிடம் இருந்த தேர்தல் முடிவு சீட்டினை பிடித்து இழுத்தனர். அதில் அந்தச் சீட்டு கிழிந்தது.
அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ம றுஉத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக,’ செயல் அலுவலர் அறிவித்தார்.