ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தை ரஷ்ய படையினர் கைப்பற்றியதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அணு உலையை இயக்கும் பணியாளர்கள் மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்” என்று உள்ளூர் அதிகாரி ஒருவர், சமூக ஊடகங்களில் தெரிவித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ளது.
அணுமின் நிலைய பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.