அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்துள்ளதாக உக்ரைன் நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.இதுவரை ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் மட்டுமானதாக இருந்த போர் இப்போது ரஷ்யாவிற்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் வந்ததால் போரின் பதற்றம் அதிகரித்தது.இப்போது உக்ரைனிற்கு ஆதரவாக எந்த நாடு வரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.