திருச்சி மாநகராட்சி வரலாற்றில் தொடர்ந்து 5 முறை மாநகராட்சி கவுன்சிலராக வெற்றிபெற்றவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் மு.அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி 27-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மு.அன்பழகன், இதற்கு முன் இரண்டு முறை துணை மேயராக இருந்திருக்கிறார்.
இரண்டு முறை துணை மேயர், 5 முறை தொடர்ச்சியாக மாமன்ற உறுப்பினராக இருந்த இவருக்கு இந்த முறை திருச்சி மேயர் பதவி உறுதியாகியுள்ளது.
கே.என்.நேருவின் மிகத் தீவிர ஆதரவாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளரும் மலைக்கோட்டை பகுதிச்செயலாளருமான மதிவாணனுக்கு துணை மேயர் பதவிக்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அதேவேளையில் விஜயா ஜெயராஜும் துணை மேயர் பதவிக்கான ரேஸில் இருப்பதால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.