ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மேலூர் நகராட்சி 8வது வார்டில் திமுக வேட்பாளர் முகமது யாசின் 651 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். முகமது யாசினை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 125 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் 8 வாக்குகளையும் பெற்று டெபாசிட் இழந்தனர்.
ஹிஜாப் சர்ச்சையை கிளப்பிய பாஜக சார்பில் போட்டியிட்ட அம்சவேணி 10 ஓட்டுகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எட்டாவது வார்டுக்கான தேர்தல் அங்குள்ள அல்அமீன் பள்ளியில் நடைபெற்றது. அங்கு ஹிஜாப் உடை அணிந்து வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப் உடையை அகற்றிவிட்டு வாக்களிக்கும்படி பாஜக முகவர் கிரிராஜன் கூறினார்
பாஜக முகவரின் செயலுக்கு மற்றக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் சர்ச்சையை ஏற்படுத்திய முகவர் அப்புறப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
.