அமெரிக்காவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேரிலாண்ட் மாகாண முன்னாள் அமைச்சர் ராஜன் நடராஜன் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக முதலமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகள், மகிழ்ச்சி அளிப்பதாகவும் , 1 லட்சம் கோடி முதலீட்டை நோக்கி தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதை குறிப்பிட்ட ராஜன் நடராஜன், தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும் உறுதி அளித்தார்.