தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க முடியாது. அதேபோல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் சீட்டையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2013-ல் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில்தான் அமலுக்கு வந்தது. அதன் பின்னர் 2014, 2019 மக்களவைத் தேர்தலில் நடைமுறையில் இருந்தது. 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 5.6 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்க்களித்தனர். ஆனால், 2021-ல் இந்த எண்ணிக்கை 3.46 லட்சமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.