நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்,ரவி ஐந்து மாதங்கள் கழித்து சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் தலைமையில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 6) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு கூட்டத்தின் முடிவில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பாஜக தவிர்த்து பிற அனைத்து சட்டமன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5:30 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரச அறிவித்துள்ளது.