ஸ்புட்னிக் லைட் கோவிட் தடுப்பூசிக்கு (Sputnik Light COVID vaccine) இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கி இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருக்கிறார்.
இது நாட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் சிங்கிள்-டோஸ் கோவிட்-19 தடுப்பூசி ஆகும். கொரோனா மூன்றாம் அலை சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி அதாவது மூன்றாம் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளது.
நாட்டில் ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்ற 9-வது கோவிட் தடுப்பூசி இதுவாகும். ரஷ்யாவில் ஸ்புட்னிக் லைட்டின் 1 மற்றும் 2-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் தரவுகள் மற்றும் ரஷ்யாவில் அதன் 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையின் தரவுகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO Central Drug Standards Control Organisation) வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளது.