தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி என்றும், பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பார்களில் மதுபானம் அருந்திய நபர்களை பொது இடங்களில் நடமாட அனுமதிப்பது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி, டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.