2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ”அவ்வகையில், 2021ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார் , பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது – சூர்யா சேவியர், சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா. சஞ்சீவிராயர் , சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை திங்களிதழ், தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு. அரசேந்திரன், உமறுப்புலவர் விருது – நா. மம்மது , கி.ஆ.பெ. விருது – முனைவர் ம. இராசேந்திரன், கம்பர் விருது – பாரதி பாஸ்கர், ஜி.யு.போப் விருது – ஏ.எஸ். பன்னீர்செல்வம் , மறைமலையடிகள் விருது – சுகி.சிவம் , இளங்கோவடிகள் விருது- நெல்லைக் கண்ணன், அயோத்திதாசப் பண்டிதர் விருது – . ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.