காஞ்சிபுரம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தலைமறைவாகியிருந்த குணா மனைவி எல்லம்மாளை கடந்த 9-ம் தேதி கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக , படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகிய 3 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார் . இவர்களோடு மேலும் சிலர் ஒட்டுமொத்தமாக 40 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரவுடி குணா இன்று சரணடைந்தார். ரவுடி குணாவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.