ராமலிங்க அடிகளார் ஜோதியான இன்று ”அணையா அடுப்பு மூலம் பட்டினி வயிறுகளின் பசியாற்றிய வடலூர் வள்ளலாரைப் போற்றுவோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவருட்பா பாடல்களை இயற்றிய ராமலிங்க சுவாமிகள், 1823-ல் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். 1867-ல் வடலூரில் சத்திய ஞான சபை அமைத்து பசியோடு வருபவர்களுக்கு உணவளித்தார். 1874-ல் தைப்பூசத் திருநாளில் அவர் ஜோதியான நாளை ஒவ்வொரு ஆண்டும் வடலூரில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 151 வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. காலை 10 மணிக்கும் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது .
வள்ளலாரின் நினைவைப் போற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் தளத்தில், “வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்!” என்று கூறியுள்ளார்.
வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் #வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்!
— M.K.Stalin (@mkstalin) January 18, 2022