வஉசியும், வேலுநாச்சியாரும் அவ்வளவு பிரபலம் ஆனவர்கள் இல்லை என்று கூறி, குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்க அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது… இது பெருத்த அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகிறது.
இந்த விழாவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.. அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தலைவர்களை நினைவுகூர்ந்து அல்லது தேசபக்தியை விளக்கும் வகையில் இந்த அலங்கார ஊர்திகள் அலங்கார செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த முறை தமிழக அரசின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள் தயாரானது.. ஆனால், அவை நிராகரிக்கப்பட்டுள்ளது..
தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4வது சுற்று வரை சென்ற நிலையில், அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டுள்ளது… காரணம், வஉசி, வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்கிறார்கள்..
ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 3-ம் தேதி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.. அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டிருந்தார்.. வீரமங்கை ராணி அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
ஒரு நாட்டின் பிரதமரே வேலுநாச்சியார் யார் என்பதை அறிந்து வாழ்த்து தெரிவிக்கும்போது, அவரது தலைமையிலான மத்திய அரசு, வேலுநாச்சியார் என்றே தெரியாது என்று சொல்லி இருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.. வேலுநாச்சியார் பற்றி பிரதமர் மோடி போட்ட வாழ்த்து, அதிகாரிகளுக்கு தெரியாவிட்டாலும், வ.ஊ.சி வேலு நாச்சியார் ஆகியோருக்காக மத்திய அரசு ஏற்கனவே தபால் தலைகளை வெளியிட்டுள்ளது.. இது எப்படி அதிகாரிகளுக்கு தெரியாமல் போகும் என்ற கேள்வி எழுகிறது.